/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகளிர் நலன், உரிமைகளை நிலை நாட்டும் தமிழக அரசு அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
/
மகளிர் நலன், உரிமைகளை நிலை நாட்டும் தமிழக அரசு அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
மகளிர் நலன், உரிமைகளை நிலை நாட்டும் தமிழக அரசு அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
மகளிர் நலன், உரிமைகளை நிலை நாட்டும் தமிழக அரசு அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
ADDED : அக் 18, 2024 02:54 AM
மகளிர் நலன், உரிமைகளை நிலை நாட்டும் தமிழக அரசு
அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
தர்மபுரி, அக். 18-
''மகளிர் நலன் மற்றும் உரிமைகளை நிலைநாட்டுவதில் தமிழக அரசு எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது'' என, அமைச்சர்
பன்னீர்செல்வம் பேசினார்.
தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரி கலையரங்கத்தில், ஊரக பகுதிகளில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் மனு அளித்தவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு, செயற்கை கால்கள், பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, ஒருங்கிணைந்த பண்ணையம், ரொட்டோவேட்டர், சோலார் பம்ப் செட், கோழி வளர்ப்பு கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
தர்மபுரியில், மகத்தான பல திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. கடந்த, 1989ல், மகளிர் சுய உதவி குழுக்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். கடந்த ஜூலை, 11ல் ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இது போன்ற திட்டங்களால், குறிப்பாக பெண்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். மகளிர் நலன் மற்றும் உரிமைகளை நிலைநாட்டுவதில், எப்போதும் அக்கறையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தையும் தமிழக முதல்வர் தர்மபுரியில் தான் துவக்கினார். இதில், பெறப்பட்ட, 46,830 மனுக்களில், 26,243 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், முதல்கட்டமாக, 307 பேருக்கு, 2.26 கோடி ரூபாய், 2ம் கட்டமாக, 100 பேருக்கு, 1.19 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
அதேபோல இன்று, மக்களின் கோரிக்கை மனுக்களை ஏற்று, 142 பேருக்கு, 1.58 கோடி ரூபாய் மதிப்பிலும், 391 பேருக்கு, 1.58 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மின்னணு ரேஷன் கார்டு என மொத்தம், 533 பேருக்கு, 2.09 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
தர்மபுரி, தி.மு.க., -
எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.