/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
/
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : நவ 29, 2024 01:23 AM
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்
பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
ஒகேனக்கல், நவ. 29-
ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித் தார். மாநில பொருளாளர் சதக்துல்லா, தர்மபுரி மாவட்ட தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட செயலாளர் கிரதர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விக்கிரமராஜா பெயர் பலகையை திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதியின் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன், துணைச்செயலாளர் கார்த்திக், நிர்வாக குழு உறுப்பினர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.