/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : பிப் 20, 2026 06:14 AM

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே உள்ள, ஹிந்துஸ்தான் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் அடிப்படை வசதி கேட்டு, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில், நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தொழிற்சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் நாகராஜன் உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.இதில், ஹிந்துஸ்தான் பொட்ரோலிய சேமிப்பு கிடங்கில், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும், 300-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி டிரைவர்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். சுகாதாரமான கழிப்-பறை அமைத்து கொடுக்க வேண்டும். மலிவு விலையில் கேன்டீன் அமைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். வேலை நேரத்தை காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை என நிர்ணயிக்க வேண்டும். தொழிற்சங்கத்தில் சேர்ந்ததால், பணிநீக்கம் செய்யப்பட்ட டேங்கர் லாரி டிரைவர் மற்றும் உதவியாளருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

