/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
/
டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 18, 2024 01:43 AM
தர்மபுரி, டிச. 18-
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில், தர்மபுரியில் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாநில சிறப்பு தலைவர் பாரதி தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகன், பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
இதில், டாஸ்மாக் கடைகளில் கடந்த, 22 ஆண்டுகளாக பணி
புரிந்து வரும் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மது விற்பனை பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும். இரவு, 10:00 மணி வரை விற்பனை செய்த தொகையை எடுத்து செல்ல வெகு நேரமாவதால், கொள்ளையர்களின் பயம் அதிகரித்து
வருகிறது.
விற்பனையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 22ல், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் தினகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.