ADDED : மே 28, 2026 03:59 AM
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள் நேற்று முன்தினம் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி மதுபான பாட்டில்-களை டாஸ்மாக் பணியாளர்கள் வாங்குவதை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி-யுறுத்தி, டாஸ்மாக் கடைகளை அடைத்து, தர்ம-புரி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று டாஸ்மாக் அலுவலகம் முன், 2வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மேலாளர் கேசவன், போராட்டத்தில் ஈடுபட்டவர்-களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதில், சுமூக தீர்வு ஏற்படாத நிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.
இது குறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் ஒருங்-கிணைப்பு குழுவை சேர்ந்த முருகையன் கூறு-கையில், ''தமிழகத்தில் கடந்த, 2003 நவ.,ல் அரசு டாஸ்மாக் கடைகள் தொடங்கப்பட்டன. 22 ஆண்-டுகள் கடந்தும், இதுவரை டாஸ்மாக் பணியாளர்-களை பணி நிரந்தரம் செய்யவில்லை. கால-முறை ஊதியமும் வழங்கவில்லை. அரசு எங்-களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை, அரசு விடு-முறை அளிக்க வேண்டும். காலி மதுபாட்டில்கள் வாங்க நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.இந்த போராட்டத்தால் மாவட்டத்தில், அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று, 2வது நாளாக அடைக்கப்பட்டு இருந்தன.
