ADDED : மே 13, 2026 04:14 AM
தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில், அரசு டாஸ்மாக் கடைகள் மூடல் இல்லை,'' என, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் தெரிவித்-துள்ளார்.
தமிழகத்தில், பொதுமக்களின் நலன் கருதி, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், 500 மீட்டருக்குள் அமைந்துள்ள, 717 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட, தமிழக முதல்வர் விஜய், நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் கேசவனிடம் கேட்-டபோது அவர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், 67 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இதில் ஒருசில இடங்களில், டாஸ்மாக் கடைகளை ஒட்டி, அரசு அனுமதி பெற்ற பார்கள் மற்றும் தனியாருக்கு சொந்-தமான ஓட்டல்களில், பார்கள் இயங்கி வருகின்றன. இதில், தமி-ழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, தர்மபுரி மாவட்டத்தில் அகற்றும் படியான டாஸ்மாக் கடைகள் ஏதுமில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
