ADDED : ஆக 14, 2026 04:46 AM

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், நேற்று டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகி முனுசாமி தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகி சிவாஜி உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், த.வெ.க., அரசு டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக்கை தனியார் மயமாக்கும் முயற்-சியை கைவிட வேண்டும். ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும். காலி மது பாட்டில்களை தனியார் மூலம் வாங்கப்படும் என்ற அமைச்சரின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பணியின் போது இறந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் விடுமுறை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் கூடுதலாக வழங்க நிர்ப்பந்தம் செய்யப்படும் கடை வாடகை, மின் கட்டணம், இறக்கு கூலி, மதுபாட்டில்கள் சேதாரம் உள்ளிட்ட கட்டணங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷமிட்டனர்.
