UPDATED : அக் 09, 2026 06:32 AM
ADDED : அக் 09, 2026 05:53 AM

தர்மபுரி; தர்மபுரியில் 'டிபி முக்த் பாரத் அபியான்' எனும் காசநோய் இல்லாத இந்தியா இயக்கம் துவக்கப்-பட்டது.
இந்தியா முழுவதும் காசநோய் இல்லாத மாவட்டங்களை உருவாக்கும் நோக்கில், 55 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட, 5 மாவட்டங்களில் தர்மபுரி மாவட்டமும் இடம்-பெற்றுள்ளது. தர்மபுரியில், இந்நிகழ்ச்சியின் துவக்க விழா நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கவிதா தலைமை வகித்து பேசியதா-வது: தர்மபுரி மாவட்டத்தில் காசநோய் இல்லாத பஞ்.,த்தை உருவாக்கும் நோக்கில், 70 பஞ்.,கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 'டிபி முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் படி, இப்பகுதிகளில் 25 என்.சி.சி., மாணவர்கள், 25 தன்னார்வலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உள்-ளிட்டோர் பங்கேற்று, வீடு வீடாக சென்று, பொது-மக்களிடம் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். முதற்கட்டமாக கொலரத்துார், பாலக்கோடு வட்-டாரத்தில் பேலாரஹள்ளி, நல்லம்பள்ளி வட்டா-ரத்தில் மாட்டுக்காரனுார், அரூர் வட்டாரத்தில் வள்ளிமதுரை, மாரண்டஅள்ளி வட்டாரத்தில் பொம்பட்டி என, 5 கிராமங்கள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்-திரன், காச நோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் மருத்துவர் பாலசுப்ரமணியம், மை பாரத் அமைப்பில் மாவட்ட இளைஞர் நல அலுவலர்
சிவ சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
