/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வகுப்பறையில் மாணவனை வைத்து பூட்டி சென்ற ஆசிரியர்களால் பரபரப்பு
/
வகுப்பறையில் மாணவனை வைத்து பூட்டி சென்ற ஆசிரியர்களால் பரபரப்பு
வகுப்பறையில் மாணவனை வைத்து பூட்டி சென்ற ஆசிரியர்களால் பரபரப்பு
வகுப்பறையில் மாணவனை வைத்து பூட்டி சென்ற ஆசிரியர்களால் பரபரப்பு
ADDED : நவ 26, 2024 06:45 AM
தர்மபுரி: இண்டூர் அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில், மேஜைக்கடியில் துாங்கி கொண்டிருந்த ஒன்றாம் வகுப்பு மாணவனை கவனிக்-காமல், ஆசிரியர்கள் வகுப்பறையை பூட்டிச்சென்றது தொடர்பாக, தொடக்கக் கல்வி அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி அடுத்த, ஏ.செக்காரப்பட்டி, அரசு நடுநிலைப்பள்ளியில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, 108 மாணவர்கள் படிக்கின்றனர். அதே பகுதியை சேர்ந்த, ஒன்றாம் வகுப்பு மாணவன் கடந்த, 22 அன்று மாலை, பள்ளி நேரம் முடிந்தும், வீட்டிற்கு வராததால், பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர். அங்கு, பூட்டிய வகுப்பறைக்குள் மாணவன் துாங்கி கொண்டிருந்தான். பெற்றோர் அதிர்ச்சிய-டைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையறிந்த ஆசிரியர்கள், மீண்டும் பள்ளிக்கு வந்து, வகுப்ப-றையை திறந்தனர். வகுப்பறையில் மேஜைக்கு அடியில், மாணவன் துாங்கி கொண்டிருந்ததை கவனிக்காமல், வகுப்ப-றையை பூட்டி சென்றதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தென்றல், வட்டார கல்வி அலுவலர் ஜீவா ஆகியோர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரித்துள்ளனர். விசாரணை முடிவில், நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்-வரன் நேற்று அப்பள்ளிக்கு சென்று, மாணவர்கள் மற்றும் ஆசிரி-யர்களிடம் இது குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை செலுத்த ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டார்.