ADDED : நவ 23, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தர்ம-புரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சி.இ.ஓ., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாபுசுந்தரம், தங்கவேல், முரு-கேசன், சக்திவேல், ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கொல்லப்பட்ட ஆசிரியைக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலி-யுறுத்தினர். இறந்த ஆசிரியைக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

