/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 19, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி;தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், அருள்சுந்தரம் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சாமிநாதன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சென்னகேசவன் உட்பட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் மறியலில் ஈடுபட்ட, 83 பெண்கள் உட்பட, 205 பேரை போலீசார் கைது செய்தனர்.