ADDED : மார் 09, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், 10 வது நாளாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது.
மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் சிவமலர் தலைமை தாங்கினார். அனிதா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சசிகுமார் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர்.

