ADDED : ஜூன் 17, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார்
அடுத்த வேப்பிலைபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர், 40, அரசு பள்ளி
ஆசிரியர். இவரது மனைவி மீனா, 30. இருவரிடையே ஏற்பட்ட கருத்து
வேறுபாடு காரணமாக, 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கடந்த,
9ம் தேதி முதல் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில்
கடந்த, 13 அதிகாலை வீட்டில் இருந்த மீனா மாயமானார். பல இடங்களில்
தேடியும் கிடைக்கவில்லை.புகார்படி கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
