ADDED : ஜன 10, 2026 05:54 AM

தர்மபுரி: முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்-டத்தில், தமிழக அரசின் 'உங்க கனவ சொல்-லுங்க' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, தர்மபுரி அரசு கலைக்கல்லுா-ரியில் நடந்த உங்க கனவ சொல்லுங்க திட்ட துவக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சதீஸ் தன்னார்வலர்களுக்கு தொப்பி, மொபைல் இணைப்புகளை வழங்கினார். இதில், 1,079 தன்-னார்வலர்களை கொண்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பி-னர்களை நேரில் சந்தித்து, 30 நாட்களில் செயல்-படுத்தப்படும், 65 திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய, 3 கன-வுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறியவுள்-ளனர்.
இதில், தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி, பா.ம.க., -எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், நகராட்சி சேர்மன் லட்சுமி, டி.ஆர்.ஓ., கவிதா, ஆர்.டி.ஓ., காயத்ரி, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
