ADDED : அக் 27, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் சுவாமி நகை திருட்டு
தர்மபுரி, அக். 27-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, எட்டியாம்பட்டியில், பெருமாள் கோவில் உள்ளது. இதில், கடந்த, 9 அன்று கோவில் பூசாரி சின்னசாமி சுவாமிக்கு பூஜை முடித்த பின், கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டை உடைத்து, சுவாமி கழுத்தில் இருந்த, 2 கிராம் தங்கத்தாலி மற்றும் உண்டியலில் இருந்த, 30,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.