/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றாமல் தர்மபுரி நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

ADDED : ஜன 03, 2025 01:02 AM
தர்மபுரி, ஜன. 3-
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, 10வது வார்டு சவுளுப்பட்டி பகுதியில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உரிய பொது நிலம் உள்ளது. இங்கு, சவுளுப்பட்டி, குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்களது வீடுகளில் சேகரிக்கும் குப்பையை இங்கு கொட்டி செல்கின்றனர். நகராட்சி ஊழியர்களும் இதை முறையாக அள்ளிச் செல்வதில்லை. இதனால், இந்த இடத்தில் பல மாதங்களாக குப்பை தேங்கி சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு தேங்கும் குப்பையில் இருந்து வெளிவரும், புழு, பூச்சி மற்றும் பல்வேறு விஷ ஜந்துகள் அருகில் உள்ள வீடுகளில் புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
விபரம் அறியாத குழந்தைகள் இவற்றை கையில் எடுத்து பொம்மை என நினைத்து விளையாடுகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இங்குள்ள குப்பையை அகற்ற, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.