/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிரம்பிய பொதியம்பள்ளம் அணைக்கட்டு சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : அக் 21, 2024 07:45 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த அஸ்திகிரியூர் கிராமத்தில், வத்தல்மலை அடிவாரத்தில் கல்லாற்றின் குறுக்கே பொதியம்பள்ளம் அணைக்கட்டு அமைந்துள்ளது. இதற்கு, வத்தல்மலையில் மழை பெய்தால் மட்டுமே நீர் நிரம்பும். அதன்படி கடந்த சில நாட்களாக கனமழையால் நீர்வரத்து அதிகரித்து அணைக்கட்டு நிரம்பியது.
இதன் மூலம், நல்லகுட்லஹள்ளி, கடத்துார், மடந-ஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, செல்வகவுண்டன் கொட்டாய், புங்கன் கொட்டாய் ஆகிய பகுதிக-ளுக்கு பிரதான கால்வாய் மூலமும், தண்ணீர் சென்று, பின் போசிநாய்க்கனஹள்ளி, வேடியூர் குட்டை உள்ளிட்ட, 19 ஏரிகள் நிரம்ப வாய்ப்பு உள்ளது. கல்லாற்றின் வழியாகவும் தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து மழை பெய்தால், கல்-லாறு மற்றும் பிரதான வாய்க்கால் மூலம், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாய நிலங்கள், பாசன வசதி பெறும் வாய்ப்பு உள்ளது. அணைக்கட்டுக்கு நீர்வரத்தானதால் அருகிலுள்ள அஸ்திகிரியூர், முத்தனுார், நல்லகுட்லஹள்ளி வெள்ளிங்கிரி, கோம்பை உள்ளிட்ட சுற்று வட்-டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.