ADDED : மார் 29, 2025 07:33 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், நேற்று அதிகபட்சமாக, 100.4 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், பென்-னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக, பகல் மற்றும் இரவில் அதிகமான வெப்பம், அனல் காற்று வீசி வருகிறது. நேற்று முன்தினம் முதல், மார்ச், 31 வரை தர்மபுரி உட்பட, 10 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், தர்மபு-ரியில் நேற்று முன்தினம், 99.5, நேற்று, 100.4 பாரன்ஹீட் வெப்ப -நிலை பதிவானது. வெயிலின் தாக்கத்தால், மதிய நேரத்தில் சேலம் -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தர்மபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.