/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்சி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி
/
கட்சி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி
ADDED : ஆக 16, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: சுதந்திர தினவிழாவையொட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்துாரில், பா.ஜ., அலுவலகம் முன்புள்ள, அக்கட்சியின் கொடிகம்பத்தில் நேற்று, தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
மண்டல தலைவர் சிங்காரம் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல், கடத்துார் போலீஸ் ஸ்டேஷன் முன்பு, காங்., கட்சியின் கொடி கம்பத்தில் அக்கட்சியினர் தேசியக்கொடி ஏற்றினர்.

