/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு'
/
'ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு'
'ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு'
'ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு'
ADDED : நவ 08, 2024 01:12 AM
'ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள்
எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு'
தர்மபுரி, நவ. 8-
தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சுற்றுலாத்துறையின் சார்பில், 2.23 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திறந்தவெளி முகாம்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் கலாசாரம், கோவில் கட்டட கலைகள், பாரம்பரியம் பற்றி அறிய சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பாயும் காவிரியின் அழகை கண்டு ரசிக்க, பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 2022ல், 4.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டு ஜன., முதல் ஜூலை வரை, 7.24 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டர் சாந்தி, மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், தி.மு.க., - எம்.பி., மணி, பென்னாகரம் பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, சுற்றுலாத்துறை இணை இயக்குனர் புஷ்பராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
* ஒகேனக்கல்லில், தமிழ்நாடு ஓட்டலில் உள்ள தங்கும் விடுதி யில் சுற்றுலா பயணிகள் தங்கும் அறைகள் மற்றும் புதியதாக தயாராகி வரும் ரெஸ்டாரெண்ட் பணிகளை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், 18.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் புதிய கடைகள், மசாஜ் செய்யும் இடம், உடை மாற்றுமிடம், கழிப்பறைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பின் போது, ஊட்டமலை பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்க, சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, மாஜி
எம்.எல்.ஏ.,க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.