/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நடந்த சாலை பணி நிறுத்தம் கோவில் நிலத்தில் அத்துமீறி
/
நடந்த சாலை பணி நிறுத்தம் கோவில் நிலத்தில் அத்துமீறி
நடந்த சாலை பணி நிறுத்தம் கோவில் நிலத்தில் அத்துமீறி
நடந்த சாலை பணி நிறுத்தம் கோவில் நிலத்தில் அத்துமீறி
ADDED : ஆக 16, 2024 12:57 AM
பாலக்கோடு,
தர்மபுரி அருகே, கோவில் நிலத்தில் அத்துமீறி நடந்த சாலை பணி நிறுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளியில், பல ஆண்டுகள் பழமையான அக்குமாரியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு அதே பகுதியில், 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்தில் எந்தவித அனுமதியுமின்றி பி.கொல்லஹள்ளி பஞ்., நிர்வாகம் சார்பில் கடந்த, 2 நாட்களாக, சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. இது குறித்து நேற்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் படி சம்பவ இடம் வந்த பாலக்கோடு தாசில்தார் ரஜினி, அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று தடுத்து நிறுத்தினார்.