/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அறுவடை செய்த துவரைக்கு செம்மண் பிடிக்கும் பணி
/
அறுவடை செய்த துவரைக்கு செம்மண் பிடிக்கும் பணி
ADDED : மார் 17, 2025 03:39 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், மானாவாரியாக துவரை சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இதில், 2024 - 2025ம் ஆண்டில் மாவட்டத்தில், 15,569 ஏக்கரில் விவசாயிகள் துவரை சாகுபடி செய்துள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்-தனர்.
தற்போது, துவரை அறுவடை முடிந்துள்ள நிலையில், துவரம் பருப்பின் விலை சற்று குறைந்துள்ளது.
இது குறித்து, இருமத்துாரை சேர்ந்த விவசாயி சிவா கூறுகையில், ''துவரையை அறுவடை செய்த பின், உள்ளூரில் சிறிய அளவில் விற்பனை செய்வோர் மற்றும் வீட்டில் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவோர் துவரைக்கு செம்மண் பிடித்து, காய வைக்-கிறோம்.மண் பிடித்து காயவைத்த பின், இயந்திரங்கள் மூலம் உடைத்து தோல் நீக்கி, துவரம் பருப்பாக விற்பனை செய்யப்படுகிறது. இதில், எங்களை போன்ற சிறு வியாபாரிகள் உள்ளூரிலுள்ள மக்க-ளுக்கு தோல் நீக்கிய துவரம் பருப்பு, 180 ரூபாய் தோல் நீக்காத துவரை, 90 ரூபாய் என விற்பனை செய்து வருகிறோம். இதில், துவரம் பருப்பின் தன்மை மாறாமல் இருக்க, செம்மண் பிடித்து தோல் நீக்கியதை, பொதுமக்கள் எங்களிடம் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்,'' என்றார்.