/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ்க்கவிஞர் மன்ற முப்பெரும் விழா
/
தமிழ்க்கவிஞர் மன்ற முப்பெரும் விழா
ADDED : பிப் 17, 2025 02:56 AM
அரூர்: அரூர் அடுத்த சித்தேரி மலையில், தர்மபுரி மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றம் சார்பில், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நுால் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது.
பாவலர் முல்லையரசு விழாவிற்கு தலைமை வகித்து, கவியரங்கை துவக்கி வைத்தார். 'சிந்தை மயக்கும் சித்தேரி மலை-யழகு' என்ற தலைப்பில், மதனகோபாலன், ரவிச்சந்திரன், முகுந்-தமாதவன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். மாவட்ட தலைவர் மலர்வண்ணனின், 'பெண்ணோவியம் குறுங்காவியம்' என்ற நுாலை புலவர் பரமசிவம் வெளியிட்டார். ஆசிரியர் இளங்கோ பெற்றுக் கொண்டார். விழாவில், கவிஞர் பழனி, நவ-கவி, ரவீந்திரபாரதி, கீரை பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் சம்பத் செய்திருந்தார்.