/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையில் இடிந்து விழுந்த 7 வீடுகளின் சுவர்கள்
/
மழையில் இடிந்து விழுந்த 7 வீடுகளின் சுவர்கள்
ADDED : டிச 02, 2024 03:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் 'பெஞ்சல்' புயலால் கனமழை பெய்து வருகிறது. கொக்கராப்பட்டியில் வசந்தா என்பவரின் வீடு, அ.பள்ளிப்பட்டி ராமு, கவுண்டம்பட்டி உஷா ஆகியோரின் ஓட்டு வீடுகள் என தாலுகாவில் மொத்தம், 7 வீடுகளின் ஒரு பக்க சுவர்கள் மழைக்கு இடிந்து விழுந்தன.
சமத்துவபுரம் பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அதிகாரப்பட்டி அம்மன் நகரில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.மேலும் ஏற்காடு பகுதியில் பெய்து வரும் மழையால் பீனியாறு, மீனாறு, வேப்பாடி ஆறு, வாணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்காடு பகுதியில் பெய்த மழையால் போதக்காடு மீனாற்றின் வழியாக பையர்நத்தம் ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் தாசில்தார் வள்ளி, ஆர்.ஐ., விமல், உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.