/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ராதா, ருக்மணி, சீதா திருக்கல்யாண வைபவம்
/
ராதா, ருக்மணி, சீதா திருக்கல்யாண வைபவம்
ADDED : நவ 24, 2025 01:14 AM
தர்மபுரி: தர்மபுரி, ஸ்ரீராகவேந்திரா சுவாமி கோவிலில், 24வது ஆண்டு நாம சங்கீர்த்தன பகவத மேளா நேற்று நடந்தது.
நேற்று முன்-தினம் காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கி-யது. இதை தொடர்ந்து, குரு கீர்த்தனம், மாலையில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர பாராயணம், பாகவதம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு உஞ்ஜவிருத்தி நடந்தது. அதைதொடர்ந்து, ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம் ஆகிய திருக்கல்யாண வைபவங்கள் நடந்தன. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உத்சவம், சங்கீத பஜன் நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீனிவாசன் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

