/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீரன் சின்னமலை 220வது நினைவு நாள் அனுசரிப்பு
/
தீரன் சின்னமலை 220வது நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : ஆக 04, 2025 08:38 AM
அரூர்: அரூர், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 220வது நினைவு நாள் விழா நடந்தது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில், தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னாக, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார்.
கொ.ம.தே.க., சார்பில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு, கொ.ம.தே.க., மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையினர், அ.தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கவுண்டம்பட்டியிலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மோளையானுார், மெணசி, பூதநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டது.
* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தர்மபுரி, -கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கம் சார்பில், கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊர்வலமாக வந்து, ஊத்தங்கரை ரவுண்டானாவில் வைக்கப்பட்ட தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேல் தலைமை வகித்தார்.