/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : அக் 25, 2024 01:02 AM
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தர்மபுரி, அக். 25-
தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 6:00 மணிக்கு, அஷ்டபைரவ யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜை நடந்தது. மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு யாக பூஜை நடந்தது. இதேபோல், தர்மபுரி நகர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து. தங்கக்கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில், ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தக்ஷ்ண கால பைரவர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.