/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அரசு ஊழியர்களுக்கு போட்டி
/
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அரசு ஊழியர்களுக்கு போட்டி
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அரசு ஊழியர்களுக்கு போட்டி
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அரசு ஊழியர்களுக்கு போட்டி
ADDED : டிச 18, 2024 01:44 AM
தர்மபுரி, டிச. 18-
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின், வெள்ளி விழாவையொட்டி, அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடக்க உள்ளது.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வரும், 21 அன்று பகல், 2:00 முதல், 3:00 மணி வரை அரசுத்துறை அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு திருக்குறள் முதல்நிலை வினாடி - வினா போட்டி நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பகல், 1:00 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாவட்ட அளவில் நடக்கும் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், 73730 02611 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பின், ஒவ்வொரு மாவட்டத்திலும், 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, 38 மாவட்ட குழுக்கள் கலந்து கொள்ளும் இறுதி போட்டி, விருதுநகரில், வரும், 28ல் நடக்க உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெரும் முதல் குழுவிற்கு, 2 லட்சம் ரூபாய், 2ம் இடம் பெறும் குழுவிற்கு, 1.50 லட்சம் ரூபாய், 3ம் இடம் பெறும் குழுவிற்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.