/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ஜ., ஆட்சி மீண்டும் வர திருவிளக்கு பூஜை
/
பா.ஜ., ஆட்சி மீண்டும் வர திருவிளக்கு பூஜை
ADDED : மார் 25, 2024 07:16 AM
ஓசூர் : பா.ஜ., கட்சி மீண்டும் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியமைக்க வேண்டி, ஓசூரில் பிராமணர் சங்கம் சார்பில், சுவாசினி மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
நாட்டில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெற வேண்டியும், மத்தியில் மீண்டும், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டியும், சுவாசினி பூஜை, கன்யா பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிஷ்யா பள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்க ஓசூர் கிளை சார்பில் நடந்த இப்பூஜையில், ஓசூர் குகை சுவாமி என்ற சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், 72 பெண்கள் பங்கேற்றனர். அவர், பக்தர்களுக்கு ஆசி வழங்கி பேசுகையில், 'வீடு நன்றாக இருக்க, நாடு நன்றாக இருக்க வேண்டும். நாடு நன்றாக இருக்க ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். சனாதன பாரம்பரியத்தை உயர்த்துபவர்கள் தான் நாட்டிற்கு தேவை. அப்படிப்பட்ட, பா.ஜ., ஆட்சி மீண்டும் இந்த நாட்டிற்கு தேவை. அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்' என்றார்.
தமிழ்நாடு பிராமணர் சங்க, ஓசூர் கிளை மாநகர தலைவர் சுதா நாகராஜன், செயலாளர் சீனிவாசன், மகளிரணி தலைவி ரோகினி, முன்னாள் மாநகர தலைவர் சத்திய வாச்சீஸ்வரன், இணை செயலாளர் கணேசன், இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

