/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தி.மு.க., ஆட்சியில் பயமில்லை; அன்புமணி
/
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தி.மு.க., ஆட்சியில் பயமில்லை; அன்புமணி
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தி.மு.க., ஆட்சியில் பயமில்லை; அன்புமணி
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தி.மு.க., ஆட்சியில் பயமில்லை; அன்புமணி
ADDED : பிப் 10, 2025 01:32 AM

காரிமங்கலம்: ''தி.மு.க., ஆட்சியில், பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபவர்களுக்கு பயமில்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, கோவிலுார் பஞ்.,ல், ஏரிக்கு நீரேற்றும் திட்டத்தை, நேற்று தொடங்கி வைத்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் பயன்படுத்த, காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கடந்தாண்டு, 450 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்துள்ளது. அதில் தர்மபுரி மாவட்டத்திற்கு குறைந்தது, 2 அல்லது, 3 டி.எம்.சி., தண்ணீர் நீரேற்று மூலமாக, ஏரி, குளங்களில் நிரப்ப, மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றினால், 80 விழுக்காடு மக்கள் பிரச்னை தீரும்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. மாதா, பிதா, குரு என உயர்ந்த நிலையில் இருக்கின்ற ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல், தொந்தரவுகள் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தி.மு.க., ஆட்சியில், இதுபோன்ற பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபவர்களுக்கு பயமில்லை. கடுமையான சட்டங்கள் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களை, முதல்வர் ஸ்டாலின், ஓட்டுக்காக ஏமாற்றி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

