ADDED : ஏப் 06, 2026 02:50 AM

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த பளிஞ்சரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்-தொழிலாளி சின்ராஜ், 45. இவர், அவருடைய ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை வீட்டின் முன் நிறுத்தி விட்டு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை, 3:45 மணிக்கு சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது, மூன்று நபர்கள் பைக்கை திருட முயன்றது தெரியவந்தது. சத்தம் போட்டதும் தப்பியோட முயன்றவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, பென்னாகரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பைக்கை திருட முயன்றவர்கள் தர்மபுரி அருகே-வுள்ள ஏ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆபி-ரகாம், 24, காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியை சேர்ந்த டிப்ளமோ படித்த பட்டதாரி ஜோசப், 25, நல்லாம்பட்டியை சேர்ந்த டிரைவர் தமிழ்செல்வன், 28 என தெரிந்தது. போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
