ADDED : நவ 06, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, சின்னபள்ளி அடுத்த ஆர்.ஆர்.ஹள்ளியை சேர்ந்தவர் மாரியப்பன், 55. இவர், 13 ஆடுகள் வைத்துள்ளார். கடந்த, 3 அன்று மாலை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பட்டியில் வைத்து அடைத்தார்.
மறுநாள் அவற்றை காணவில்லை. மாரியப்பன் புகார் படி, பெரும்பாலை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில், ஆடுகளை திருடிய தர்மபுரி மாவட்டம், சின்னம்பள்ளி அடுத்த தோளுரை சேர்ந்த ஆறுமுகம், 38, ஆர்.ஆர்.ஹள்ளியே சேர்ந்த அர்ச்சுணன், 40, சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள ரகுனபட்டியை சேர்ந்த அருண்குமார், 31, ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 13 ஆடுகளை மீட்டனர்.

