/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது
ADDED : நவ 12, 2025 01:33 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், மத்துார் அடுத்த, தொகரப்பள்ளி, புரடையன் கொட்டாயை சேர்ந்தவர் சரோஜா, 60. இவர், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு தன் விவசாய மாந்தோப்பிற்கு நடந்து சென்றபோது, மூன்று பேர் தன்னை கீழே தள்ளி நகையை பறித்து சென்றதாக மத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் சரோஜா மாந்தோப்பிற்கு செல்லும் வழியிலுள்ள பி.வி.சி., பைப் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணி செய்து வந்த ஈஸ்வரதாசரிபள்ளியை சேர்ந்த சந்தோஷ், 37, கார்த்திக், 30, மற்றும் சிகரலபள்ளியை சேர்ந்த வினோத், 32, ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து, சரோஜாவை கீழே தள்ளி, அவர் காதில் இருந்த அரை பவுன் தோடை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், சந்தோஷ், கார்த்திக், வினோத் ஆகிய மூவரை கைது செய்தனர்.

