/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
/
விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
ADDED : ஆக 10, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, பாலக்கோடு, சூடனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை, 32, முனியப்பன், 27, மற்றும் சதீஸ், 22. மூவரும் சூடனுார் வனத்தை ஒட்டி, மின்வேலி அமைத்து, விலங்குகளை வேட்டையாட முயன்றனர்.
அப்போது பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் இரவு ரோந்து சென்றபோது, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த மூவரையும் பிடித்து, வழக்கு பதிவு செய்தனர். பின், பிடிபட்ட மூவருக்கும் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மொத்தம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.