தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/2 சிறுமியர் உட்பட மூன்று பேர் மாயம்

2 சிறுமியர் உட்பட மூன்று பேர் மாயம்

2 சிறுமியர் உட்பட மூன்று பேர் மாயம்


ADDED : ஜூன் 03, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கொட்டாயூரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 28. இவரது மனைவி அபர்ணா, தம்பதிக்குள் குடும்பத் தகராறால், அபர்ணா கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனஉளைச்சலில் இருந்த தினேஷ்குமார் கடந்த, 31ல் காலை, 11:00 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் தந்தை ஜெயராமன் புகார் படி, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 30ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.பாலக்கோடு தாலுகா, புலிக்கல் அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.கடந்த, 30ம் தேதி மாயமானார். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us