ADDED : மே 07, 2026 02:52 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி சத்தியமூர்த்தி, 27. திருமணமாகாத அவர் கடந்த, 2ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார் படி, பஞ்-சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், தர்மபுரி அடுத்துள்ள சோலைக்கொட்டாயை சேர்ந்த அஜித்குமார், 25. கடந்த மாதம், 18ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார்படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.* அரூர் திரு.வி.க., நகரைச் சேர்ந்த, 17 வயதுடைய மாணவி பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், பி.ஏ., ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நி-லையில், நேற்று முன்தினம்
நள்ளிரவு, 1:00 மணிக்கு வீட்டிலிருந்து மாணவி மாயமானார். புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
