தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 2 மாணவியர் உட்பட மூன்று பெண்கள் மாயம்

2 மாணவியர் உட்பட மூன்று பெண்கள் மாயம்

2 மாணவியர் உட்பட மூன்று பெண்கள் மாயம்


ADDED : ஏப் 22, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சீகலஹள்ளி கிரா-மத்தை சேர்ந்த சரவணன், 27, இவர் கிருஷ்ணகிரியில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா, 26. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 17ம் தேதி கீர்த்தனா மாயமானார். கணவர் அளித்த புகார்படி, காரிமங்-கலம் போலீசார்

விசாரிக்கின்றனர்.

நல்லம்பள்ளியை தாலுகா, பாளையம்புதுாரை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரியில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லுா-ரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 17ம் தேதி கல்லுா-ரிக்கு சென்ற மாணவி மாயமானார். பெற்றோர் புகார்படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், மூக்கனுார் அடுத்த தின்னபட்டியை சேர்ந்த மல்விய

தரணி, 19. இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 19ல், மல்வியத-ரணி மாயமானார். பெற்றோர் புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us