தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தக்காளி விலை கிடுகிடு உயர்வு

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

தக்காளி விலை கிடுகிடு உயர்வு


ADDED : நவ 30, 2024 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் பகுதியில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்த-மலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி நடவு செய்யப்பட்டுள்-ளது. தற்போது சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அரூரில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 800 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை அதி-கரித்து ஒரு கூடை தக்காளி, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர் மழையால் செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. மேலும், நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, மண்டிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us