/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தக்காளி வரத்து குறைவு- சந்தையில் விலை உயர்வு
/
தக்காளி வரத்து குறைவு- சந்தையில் விலை உயர்வு
ADDED : ஆக 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரிதர்மபுரி மாவட்டத்தில் தக்காளி அதிகம் விளைவிக்கக்கூடிய பாலக்கோடு, மாரண்டஹள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழையால், தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த, 21 அன்று தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 38 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 40, நேற்று, 42 ரூபாய் என விலை உயர்ந்து விற்பனையானது.
வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 50 முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விலை உயரக்கூடும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.