ADDED : ஜன 03, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
பாலக்கோடு: பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால், தக்-காளி விலை சற்று குறைந்துள்ளது.
கடந்த டிச., 28 அன்று தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 56 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில தினங்க-ளாக வரத்து அதிகரித்ததால், விலை சற்று குறைந்து
வருகிறது.
டிச., 31 அன்று ஒரு கிலோ தக்காளி, 42, எனவும் நேற்று மேலும் விலை குறைந்து, 40 ரூபாய்க்கு விற்பனையானது. வெளி மார்க்-கெட்டில், 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகி-றது.
