/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் ஓட்டிகள், கடைக்காரர்கள் மகிழ்ச்சி
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் ஓட்டிகள், கடைக்காரர்கள் மகிழ்ச்சி
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் ஓட்டிகள், கடைக்காரர்கள் மகிழ்ச்சி
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் ஓட்டிகள், கடைக்காரர்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 25, 2025 03:26 AM
ஒகேனக்கல்: வார விடுமுறையையொட்டி, ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து, காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லுக்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்-வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஆற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகையின்றி, ஒகே-னக்கல் வெறிச்சோடியது. இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு
நீர்வரத்து குறைந்த நிலையில், குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
நேற்று வினாடிக்கு, 15,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. வாரவிடுமுறையான நேற்று, ஒகேனக்கல்லுக்கு, 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள், காவிரி-யாற்றில் குளித்தும், பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பரிசல்கள் மெயின் அருவி, மணல் திட்டு, பெரிபாணி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டது. தொடர்ந்து, ஒகேனக்கல் பிரசத்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டு ருசித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிக-ரிப்பால், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்யும் பெண்கள் என, பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்-தனர்.