ADDED : ஆக 28, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்:தர்மபுரி
மாவட்டம், காரிமங்கலம் தாசில்தார் சிவக்குமார், 41. இவருக்கு கிடைத்த
தகவலின்படி, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு முத்தம்பட்டி
ஏரியில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அங்கு அனுமதியின்றி
டிராக்டரில் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
ஓட்டுனர் தப்பியோடிய
நிலையில், டிராக்டரை பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில்
சிவக்குமார் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
