/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்
/
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 06, 2024 01:21 AM
அரூர், நவ. 6-
தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கடந்த, 24ல் நடந்தது. இதில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்த போதிலும், பஸ் ஸ்டாண்டில் மின் இணைப்பு வழங்காதது, புறக்காவல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நேர அலுவலகம் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் முடிவடையாத காரணத்தினால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
வர்ணதீர்த்தம் முதல், பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையின் ஒரு பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி, நேற்று அரூர் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வரும், 11ல் முதல், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.