/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு
/
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 11, 2025 12:27 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பேரூராட்சியில், தர்மபுரி மெயின் ரோடு, காந்திநகர், புதுரெட்டியூர், பொம்மிடி ரோடு, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. பல்வேறு கிராமங்களின் மைய பகுதியாக கடத்துார் உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பஸ், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக கடத்துார் வருகின்றனர். அவ்வாறு வரும்போது அரூர் மெயின் ரோடு, புட்டிரெட்டிபாபட்டி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது.
சில வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து, கடைகளை விரிவாக்கம் செய்துள்ளனர். இதே போன்று புட்டிரெட்டிப்பட்டி சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால், அவ்வழியே பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப் படுகிறது.