/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்
/
கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்
கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்
கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 06, 2024 07:55 AM
தர்மபுரி: பெங்களூருவில் இருந்து, காரைக்கால் வரை, நீண்ட துாரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைக்க, தர்மபுரி ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூருவில் இருந்து, தர்மபுரி வழியாக காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில், காலை மற்றும் இரவு நேரத்தில் செல்கிறது. நீண்ட துாரம் செல்வதால், இந்த ரயிலில், துாங்கும் வசதி கொண்ட இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மைசூர் - ராமேஸ்வரம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, தர்மபுரி வழியாக துவங்க வேண்டும். பெங்களூரு - சேலம் இடையே, பகல் நேர பயணிகள் ரயில்கள் சேவை துவங்க வேண்டும். தர்மபுரி - மொரப்பூர் இடையே, புதிய அகல ரயில்பாதை திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஈரோடு முதல் சென்னை வரை, இரவு நேரங்களில் மட்டுமே, ரயில்கள் மொரப்பூர் வழியாக செல்கிறது. இதை, பகல் நேரத்திலும் செலுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.