/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
/
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
ADDED : நவ 10, 2024 01:35 AM
சிறுதானியங்களில் விதை உற்பத்தி
மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்
பாப்பாரப்பட்டி, நவ. 10-
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், விதை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தர்மபுரி, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் நபார்டு கிராம வங்கி இணைந்து, இந்த பயிற்சி முகாமை நடத்தியது. சேலம் நபார்டு வங்கி மேலாளர் சங்கீதா தலைமை வகித்து பேசினார். பாப்பாரப்பட்டி வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா திட்டத்துக்கான நிதி உதவி பெற்று, பயிற்சிக்கு அனுமதியளித்தார்.
நிலைய மண்ணியல் துறை இணை பேராசிரியர் சங்கீதா, சிறுதானிய பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கினார். கால்நடை அறிவியல் துறை உதவி பேராசிரியர் தங்கதுரை ஒருங்கிணைந்த பண்ணையகம் குறித்து விளக்கினார். கடமடை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க, உதவி செயலாளர் ரவி வேளாண் உற்பத்தி குறித்து விளக்கி பேசி னார். இதில், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஜீவானந்தன், சிவராஜ் உள்பட, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.