ADDED : ஏப் 08, 2024 07:19 AM
அரூர் : அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், அரூர் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான, 2ம் கட்ட பயிற்சி வகுப்பு, இருபிரிவுகளாக நேற்று நடந்தது.
இதில், 1,355 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட, 1,198 அலுவலர்களுக்கு தேர்தல் நாளான்று அவர்கள் பணிபுரியும் ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டளிக்க அனுமதிக்கப் படுவார்கள். அதே போல், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, அரூர் சட்டசபை தொகுதியில் பணிபுரியும், 67 பேருக்கு அஞ்சல் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. இதில், 49 பேர் தங்களது அஞ்சல் ஓட்டு சீட்டை பயிற்சி மையத்தில் செலுத்தினர். பயிற்சி வகுப்பை டி.ஆர்.ஓ., பால் பிரின்சிலி ராஜ்குமார் ஆய்வு செய்தார். அரூர் ஆர்.டி.ஓ., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
