/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி வகுப்பு
/
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி வகுப்பு
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி வகுப்பு
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி வகுப்பு
ADDED : பிப் 23, 2024 04:31 AM
தர்மபுரி: காய்கறி பயிர்களில், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தலைமை வகித்து, இத்திட்டத்தின் முக்கியம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
இப்பயிற்சியில், வேளாண் உதவி இயக்குனர் குமார் (பொ) விவசாயிகள் அரசு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். பேராசிரியர் சிவக்குமார், மண்வள மேலாண்மை, இயற்கை முறையில் எவ்வாறு மண்வள பாதுகாப்பை மேற்கொள்வது குறித்து விரிவாக பேசினார். உதவி பேராசிரியர் தெய்வமணி, (நோயியல்) காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை குறித்து விரிவாக விளக்கினார்.
இதில், தொழில்நுட்ப மேலாளர் செந்தில், திட்ட உதவியாளர் சீனிவாசன், வேளாண் உதவி அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, 85க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.