தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : மே 01, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளில் கடந்த, 23ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்-டுப்பதிவு இயந்திரம் மற்றும் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி மே, 4ம் தேதி நடக்கவுள்ளது. இதில், ஓட்டு எண்ணும் பணிக்-காக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள், 465 பேர் மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், நேற்று கலெக்டர் சதீஸ், தலைமையில் நடந்தது.

முதலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள ஓட்டுகள் எண்ணும் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட, 275 அலு-வலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. அதை தொடர்ந்து, தபால் ஓட்டு எண்ணும் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட, 190 அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், ஓட்டு எண்ணும் அலுவலர்கள் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது குறித்தும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பணிபுரி-யவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.இதில், டி.ஆர்.ஓ., கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us