ADDED : மார் 25, 2024 07:16 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி லோக்சபா தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு சாவடிகளில், பணியாற்றும் ஓட்டு பதிவு அலுவலர்கள், 1, 2, 3 ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லுாரியில் நேற்று உதவி தேர்தல் அலுவலர் செர்லினா ஏஞ்சலா தலைமையில் நடந்தது.
இந்த பயிற்சியில், தேர்தலின் போது, கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, மாதிரி ஓட்டுப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சாந்தி ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்கினார்.
தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட ஓட்டு பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில், அரூர் தாலுகாவில் பணிபுரியும் அனைத்து ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரையும், பிற்பகல், 2:00 முதல், 6:00 மணி வரையும் நடந்த பயிற்சி வகுப்பை, கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

